பக்கங்கள்

பக்கங்கள்

24 நவ., 2012


வீரபாண்டி ஆறுமுகத்தின் மறைவுக்கு ஜெயலலிதா பதில் கூறியே ஆக வேண்டும்: மு.க.ஸ்டாலின்
வீரபாண்டி ஆறுமுகத்தின் மறைவுக்கு ஜெயலலிதா பதில் கூறியே ஆக வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் (23.11.2012) பேசிய அவர், அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட பல்வேறு வழக்குகளால் வீரபாண்டி ஆறுமுகம் பாதிக்கப்பட்டார். வீரபாண்டி ஆறுமுகத்தின் மறைவுக்கு ஜெயலலிதா பதில் கூறியே ஆக வேண்டும். இதற்கெல்லாம் காலம் நிச்சயமாக பதில் சொல்லும். ஜெயலலிதாவும் பதில் சொல்லியாக வேண்டும். இப்படிப்பட்ட கொடுமைகளை, அக்கிரமங்களை வீரபாண்டி ஆறுமுகம் அவர்களுக்கு இழைத்திருக்கக்கூடிய அவருடைய மறைவுக்கே காரணமாக அமைந்திருக்கக் கூடிய கொடுமைகளுக்கெல்லாம் ஜெயலலிதா பதில் சொல்ல வேண்டிய காலம் விரையில் வரும் என்றார்.