பக்கங்கள்

பக்கங்கள்

19 நவ., 2012


இலங்கையில் பொது வாக்கெடுப்பு: மத்திய அரசை தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தும்: கலைஞர் பேட்டி


சென்னையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் டெசோ அமைப்பின் கலந்துரையாடல் கூட்டம் 19.11.2012 திங்கள்கிழமை நடந்தது. அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் கலைஞர்,

டெசோ கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் 47 நாட்டு தூதர்களிடம் ஒப்படைக்கப்படும் டெசோ அமைப்பின் முடிவு எதிர்காலத்தில் ஈழத் தமிழர் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும். ஈழத்தமிழர் வாழ்வை நிலைப்படுத்தவும் இது உதவும். இலங்கையில் நடந்த இனப்படுகொலை பற்றி ஐ.நா. மன்றம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம்.

மேலும் இலங்கையில் பொது வாக்கெடுப்பு நடத்தும் கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவேண்டும். இந்த கோரிக்கைக்காக மத்திய அரசை தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.