பக்கங்கள்

பக்கங்கள்

15 நவ., 2012

இறுதி யுத்தத்தில் மறைந்திருந்த உண்மை நீண்ட காலத்தின்பின் வெளிவருகிறது: சம்பந்தன் எம்.பி.
இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பில் இதுவரையில் மறைந்து கிடந்த பல உண்மைகள் நீண்ட காலத்தின் பின்னர் வெளிவரும் நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. இது ஒரு முக்கியமான விடயமாகும். ஐ.நா.வின் உள்ளக அறிக்கை உத்தியோகபூர்வமாக வெளிவந்ததன் பின்னர் அது தொடர்பில்
நடவடிக்கை எடுக்க தேண்டியது ஐ.நா.வின் அதிகாரத்தில் உள்ளவர்களின் பொறுப்பாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பில் உள்ளக விசாரணையொன்றை மேற்கொள்வதற்தென ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையிலிருந்து கசிந்துள்ள தகவல்கள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே சம்பந்தன் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.