பக்கங்கள்

பக்கங்கள்

4 நவ., 2012

செல்வம் எம்.பி.யின் மைத்துனர் கொலை: சந்தேக நபர் கைது
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் மைத்துனர் சின்னத்துரை இந்திரேஸ்வரன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.புறக்கோட்டை பகுதியில் வைத்து சந்தேக நபரைக் கைது செய்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரஷாந்த ஜயகொடி வீரகேசரிக்குத் தெரிவித்தார்.

சின்னத்துரை இந்திரேஸ்வரன் நகை வியாபாரத்துக்காக 30 இலட்சம் ரூபாவுடன் சந்தேக நபரோடு சென்றதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

பணத்தை நோக்கமாகக் கொண்டு கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.