பக்கங்கள்

பக்கங்கள்

9 நவ., 2012


பிரான்ஸில் விடுதலைப்புலி இயக்க பொறுப்பாளர் பரிதி சுட்டுக்கொலை!

பிரான்ஸில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அனைத்துலக தொடர்பக பொறுப்பாளார் பரிதி என்பவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்றிரவு பரிஸ் நகரில் இடம்பெற்றுள்ளது.
பரிதி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை பரிஸ் நகர காவல்துறையினர் உறுதிப்படுத்தி உள்ளனர்.  மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பரிதி மீது துப்பாக்கி பிரயோகத்தை செய்துள்ளனர் என்றும் இவர் மீது 3 குண்டுகள் பாய்ந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பரிஸ் நகரில் உள்ள அனைத்துலக தொடர்பாக அலுவலகத்தில் வைத்து இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பரிஸ் நகரில் இயங்கிவரும் குழு ஒன்று இவரை கொலை செய்திருக்கலாம் அல்லது சிறிலங்காவின் ஒட்டுக்குழுக்கள் இப்பாதக செயலை செய்திருக்கலாம் என நம்பபடுகிறது.
கடந்த வருடமும் பரிதி மீது தாக்குதல் நடத்தப்பட்டு படுகாயமடைந்திருந்தார்.