பக்கங்கள்

பக்கங்கள்

9 நவ., 2012

பிரான்ஸில் நீண்ட கலமாகச் செயல்பட்டுவரும், மற்றும் விடுதலைப் புலிகளின் முன் நாள் தளபதியுமான ரேகன் அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் என  இணையம் அறிகிறது. சற்று முன்னர் நடந்த இத் துப்பாக்கி சூட்டில் ரேகன் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டுள்ளார்.
ரேகன் அவர்களுக்கு சமீபகாலமாக பல அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வந்தது. இந் நிலையில் இன்று சுமார் 1 மணித்தியாலத்துக்கு முன்னர் பேருந்து நிலையம் ஒன்றில் நின்றிருந்த அவரை நோக்கி 4 தடவைகள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

தமிழ் குழு ஒன்றினாலேயே இத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. சுட்டவர்கள தாம் பார்த்ததாக ஒரு தமிழர் கூறியுள்ளார் என்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விடுதலைப் புலிகளின் தளபதிகளில் ஒருவராக இருந்த ரேகன் அவர்களுக்கு பரிதி என்னும் பெயரும் உண்டு. அவர் நீண்ட நாளாக தமிழ் தேசிய செயல்பாட்டாளராக இருந்திருக்கிறார் . இவரது இவரது கொலை தமிழினத்துக்கு பெரும் இழப்பாக அமைந்துள்ளது. ரேகனின் இறப்பு, மாவீரர் பட்டியலில் சேர்க்கப்படவேண்டிய ஒன்றாகும். மாவீரன் ரேகன் அவர்களுக்கு  தனது வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறது 
இணையம்