பக்கங்கள்

பக்கங்கள்

6 நவ., 2012

இலங்கை அகதி படுகொலைதமிழ்நாடு - கரூர் அருகேயுள்ள ராயனூர் இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்த இலங்கை அகதியான ஜெயபிரகாஷ் என்பவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன
.
 

அவரின் கொலையை தடுக்க முனைந்த அவரது இளைய சகோதரர் கலைச்செல்வன் என்பவரும் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயங்களுடன் அரச மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

நிதி கொடுக்கல் வாங்கல் முறுகல் நிலை காரணமாக ஜெயபிரகாஷ் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கொலை தொடர்பாக அகதி முகாமை சேர்ந்த நிலாகரன், சுதாகரன் ஆகியோரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.