பக்கங்கள்

பக்கங்கள்

27 நவ., 2012


ராம்ஜெத்மலானிக்கு பாஜக  நோட்டீஸ் வழங்கியது
பாரதீய ஜனதா கட்சித் தலைவர் நிதின் கட்காரி பதவி விலக வேண்டும் என்று புதிய சி.பி.ஐ. தலைவர் நியமனத்தில் மத்திய அரசு தவறு செய்யவில்லை என்றும் கருத்து தெரிவித்த பாரதீய ஜனதா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான
ராம்ஜெத்மலானி நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இதைத் தொடர்ந்து, இன்று அவரின் ஒழுங்கீன நடவடிக்கைக்கு விளக்கம் அளிக்குமாறு ஷோகாஸ் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
இவரைத் தொடர்ந்து, சத்ருகன் சின்காவும் சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு உள்ளாகிறார். நிதின் கட்காரி தொடர்பான கருத்துகளை வாபஸ் வாங்குமாறு முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்காவுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்று கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.