பக்கங்கள்

பக்கங்கள்

27 நவ., 2012


போபண்ணா & சுப்ரியா திருமணம்
டென்னிஸ் நட்சத்திரம் ரோகன் போபண்ணா & சுப்ரியா திருமணம் நேற்று காலை பாரம்பரிய முறைப்படி நடந்தது.


கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் பச்சைப்பசேலென இயற்கை சூழல் நிறைந்த மடிகேரி எனுமிடத்தில் ரோகன் போபண்ணா & சுப்ரியா திருமணம் நேற்று காலை நடந்தது. கோடாவு பாரம்பரிய முறைப்படி போபண்ணா (32) க்ரீம் நிற உடை அணிந்திருந்தார். உறவுப் பெண்ணான சுப்ரியா சிவப்பு நிற சேலை அணிந்திருந்தார். சுப்ரியா பெங்களூரு கல்லூரியில் எம்ஏ படித்து வருகிறார்.

பூபதி, சோம்தேவ் வர்மன் உட்பட இந்தியாவிலுள்ள அனைத்து டென்னிஸ் நட்சத்திரங்களும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

உலக டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவு தர வரிசையில் 12ம் இடம்பெற்றுள்ள போபண்ணா, அமெரிக்காவை சேர்ந்த ராஜீவ் ராம்முடன் ஜோடி சேர்ந்து அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சென்னை ஓபன் போட்டியில் களமிறங்குகிறார்.