பக்கங்கள்

பக்கங்கள்

19 நவ., 2012


போலி ஏ.ரி.எம். அட்டைகள் மூலம் தொடரும் பண மோசடி : ரஷ்ய நாட்டவர் ஐவர் கைது
போலி எ.ரி.எம் அட்டைகளைப் பயன்படுத்தி வெள்ளவத்தைப் பகுதியிலுள்ள எ.ரி.எம் இயந்திரங்களிலிருலிருந்து பணமெடுத்த 5 ரஷ்ய நாட்டு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்
.
 

இவர்களிடமிருந்து 2.5 மில்லியன் இலங்கை ரூபாக்கள் மற்றும் 5000 யூரோக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் 250 எ.ரி.எம் அட்டைகள், 6 மடிக் கணனிகள், 2 வை பை ரவுட்டர்கள் உட்பட இலத்திரனியல் பொருட்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

இதேபோன்று எ.ரி.எம். மோசடியில் ஈடுபட்ட ரோமானிய நாட்டவர்கள் இருவர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தெஹிவளையில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

மேலும் அவர்களிடமிருந்து 58 போலி ஏ.ரி.எம் அட்டைகள் மற்றும் 23இலட்சத்து 51 ஆயிரம் ரூபா பணத்தினையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.