ஐ.நாவில் நிறைவேறியது மரண தண்டனைக்கு எதிரான தீர்மானம் |
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபையில் கொண்டுவரப்பட்ட மரண தண்டனைக்கு எதிரான தீர்மானம் 110 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
உலக நாடுகள் பலவற்றில் மரண தண்டனை இன்னும் நீடித்து வருகின்ற நிலையில் அனைத்து நாடுகளும் மரண தண்டனையை ஒழிக்கும் நோக்கத்தில், மரண தண்டனையை கைவிட வேண்டும் என்று சமூக மற்றும் மனிதாபிமான விவகாரங்களை கவனித்து வரும் ஐ.நா பொதுச்சபையில் யோசனையொன்று முன்வைக்கப்பட்டது. இந்த தீர்மானத்தில் மரண தண்டனையை பயன்படுத்துவதை கட்டுப்படுத்த வேண்டும். 18 வயதுக்கு கீழ்ப்பட்டவர்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு மரண தண்டனை விதிக்கக்கூடாது. மரண தண்டனை விதிப்பதற்கான குற்றங்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்று கூறப்பட்டது. இந்நிலையில், இந்த தீர்மானத்துக்கு எதிராக வாக்கெடுப்பு நடத்த ஐ.நா பொதுச்சபை தீர்மானித்தது. இதற்கமைய நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 110 நாடுகளின் ஆதரவுடன் மரண தண்டனைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு எதிராக இந்தியா, அமெரிக்கா, பாகிஸ்தான், சீனா, ஜப்பான், பங்களாதேஷ், ஈரான், ஈராக், குவைத், லிபியா, கொரியா உள்ளிட்ட 39 நாடுகள் வாக்களித்துள்ளன. 36 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. |
பக்கங்கள்
▼
பக்கங்கள்
▼