பக்கங்கள்

பக்கங்கள்

22 நவ., 2012


யுத்தத்திற்குப் பின்னர் யாழ். நிலமை எப்படி; கேட்டறிந்தனர் செக் குடியரசு நாடாளுமன்ற உறுப்பினர்கள்
செக் குடியரசு நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டு தற்போதைய நிலமை தொடர்பில்  கேட்டு அறிந்து கொண்டனர். 


செக் குடியரசு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவொன்று இன்று காலை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு, மீள்குடியேற்றப்பட்ட பிரதேசங்களை பார்வையிட்டதுடன், முக்கியஸ்த்தர்களையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

இன்று காலை யாழ். வந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு  வடமாகாண ஆளுநரை சந்தித்து யாழ். நிலவரங்கள் தொடர்பில் கலந்துரையாடினர்.

அதனையடுத்து அரியாலை, மறவன்புலோ ஆகிய மீள்குடியேற்றப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டதுடன் குறித்த பகுதி மக்களுடைய பிரச்சினைகளையும் கேட்டு அறிந்து கொண்டனர்.

தொடர்ந்து யாழ்.ஆயர் இல்லத்தில் ஆயருடனான சந்திப்பு இடம்பெற்றது. இதன் போது யுத்தத்திற்குப்  பின்னரான தற்போதைய நிலமைகள் தொடர்பிலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கேட்டு அறிந்து கொண்டனர்.

இதன் போது தமிழ் மக்களுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் எனவும்  அவற்றைச் செயற்படுத்த சர்வதேசம் முன்வரவேண்டும் என்றும் யாழ். ஆயர் அவர்களிடம் கேட்டுக் கொண்டார்.