பக்கங்கள்

பக்கங்கள்

2 நவ., 2012


ஐ.நா மீளாய்வு கூட்டத்தொடரில் சில நாடுகள் இலங்கைக்கு ஆதரவு தெரிவிப்ப
பெலரஸ், வட கொரியா, ஈரான், துருக்கி, சீனா, கட்டார் உள்ளிட்ட சில நாடுகள் இலங்கைக்கு ஆதரவான கருத்து வெளியிட்டுள்ளன.
ஜெனிவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைப் பேரவையின் பூகோள கால மீளாய்வு கூட்டத்தொடரில் இலங்கைக்கு ஆதரவாக சில நாடுகள் கருத்து வெளியிட்டுள்ளன.

இலங்கை விவகாரம் குறித்து கவனம் செலுத்துவதனை விடவும் சிரிய நாட்டு நிலைமைகள் குறித்து உலக நாடுகள் கூடுதல் கரிசனை கொள்ள வேண்டுமென கட்டார் தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை நடுநிலையாக செயற்படவில்லை என பெலரஸ் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அந்நாட்டு அரசாங்கம் அழைப்பு விடுத்திருந்த போதிலும் நவனீதம்பிள்ளை இதுவரை அங்கு செல்லவில்லையென குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தொடரில் அமெரிக்கா, கனடா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் அழுத்தம் கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.