பக்கங்கள்

பக்கங்கள்

7 நவ., 2012


நாட்டை நல்ல முறையில் ஒபாமா வழிநடத்துவார்! ஒபாமாவுக்கு ரோம்னி வாழ்த்து!


அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றுள்ள பராக் ஒபாமாவுக்கு, அவரை எதிர்த்துப் போட்டியிட்ட மிட் ரோம்னி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் 06.11.2012 அன்று நடைபெற்ற நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில், 274 வாக்குகளைப் பெற்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட மிட் ரோம்னி 201 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

அமெரிக்காவின் அதிபராக இரண்டாவது முறை தேர்வு செய்யப்பட்டுள்ள ஒபாமாவுக்கு, மிட் ரோம்னி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில், நாட்டை நல்ல முறையில் ஒபாமா வழிநடத்துவார் என்று நம்புகிறேன். எனக்கு ஆதரவு அளித்த ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.