பக்கங்கள்

பக்கங்கள்

7 நவ., 2012


ரோம்னியின் ஆதரவும் எனக்குத் தேவை! ஒபாமா வெற்றி உரை!

அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றுள்ள பராக் ஒபாமா சிகாகோவில் வெற்றி உரை நிகழ்த்தினார்.

அதில், அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான அமெரிக்கர்களுக்கு, ஒபாமா தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார். நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல தனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்ததற்காக மகிழ்ச்சி அடைவதாகக் கூறினார்.

மேலும் அவர பேசுகையில், நாம் ஒன்றாக இணைந்து நாட்டின் முன்னேற்றத்துக்காக பணியாற்றுவோம். அதன்படி, முன்னேற்றமான பாதையில் நாம் அனைவரும் ஒற்றுமையாக செல்வோம். சாதாரண மக்களும் எந்தவொரு உயர் பதவிக்கும் வரலாம்.

வரும் காலங்களில் அமெரிக்காவுக்கு சிறப்பான மாற்றங்கள் காத்திருக்கின்றன. இந்த முறை போட்டி கடுமையாக இருந்தது. ஆனால், நாட்டு மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியடைய உதவி செய்தீர்கள். எனக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்ட குழு, மிகக் வலிமையான பிரச்சாரத்தை மேற்கொண்டது. அவர்களுக்கும் எனது நன்றிகள்.