பக்கங்கள்

பக்கங்கள்

2 நவ., 2012

ஐ.நா.‌துணைப்பொதுச் செயலரிடம் டெசோ மாநாட்டு தீர்மான நகல்களை ஒப்படைத்தார் ஸ்டாலின் 
சென்னையில் கடந்த ஆக.12-ம் தேதி  தி.மு.க. சார்பில் கலைஞர் ‌த‌லைமையில் நடந்த டெசோ மாநாடு நடந்தது. இதில் இலங்கை தமிழர் பிரச்னை குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் தீர்மான நகல்கள் ஐ.நா.பொதுச்செயலரிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது. 
இந்நிலையில் அமெரிக்கா சென்றிருந்த தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் நியூயார்க் நகர் சென்றார். அங்கு ஐ.நா. தலைமையகத்தில் ஐ.நா.‌துணைப்பொதுச் செயலர் ஜான் எலியசனை சந்தித்தார். 


இந்த சந்திப்பின்போது அவரிடம் டெசோ தீர்மான நகல்களை ஒப்படைத்தார்.  அதில்,இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்க வேண்டும். 
இலங்கையில் போர்க்குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் மீது ஐ.நா. நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கையின் தமிழர்கள் பகுதிகளில் ராணுவத்தினரை வெளியேற்ற வேண்டும். 
சிங்களர்களால் பறிக்கப்படட் வீடு,நிலங்களை தமிழர்களிடம் இலங்கை அரசு ஒப்படைக்க வேண்டும். இலங்கை தமிழர்களிடையே ஐ.நா. சபை ‌மூலம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். 
இந்த வாக்கெடுப்பு தெற்காசிய மனித உரிமை பிரச்‌னையாக முன்னிலைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட ஷரத்துக்கள் அதில் இடம் பெற்றிருந்தன. இந்த சந்திப்பின் போது தி.மு.க. முன்னாள் அமைச்சர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இது குறித்து ஸ்டாலி்ன்,  ‘’நியூயார்க் சென்று ஐ.நா. பொதுச்செயலர் ஜான் எலியசனை அரை மணிநேரம் சந்தி்த்தோம், இலங்கை தமிழர் பிரச்னையில் நீங்கள் எடுத்து வரும் நடவடிக்கையினை பாராட்டுகிற‌ோம். தற்போது மனித உரிமை மறுஆய்வுக்கூட்டம் நடந்து வருகிறது. இத்தீர்மான நகல் உறுதிப்படுத்துவதாக இருக்கும்’’ என்று தெரிவித்துள்ளார்.