பக்கங்கள்

பக்கங்கள்

13 டிச., 2012


சயனைட் அடித்துவிட்டு கடைக்கு தீ வைத்த தமிழர் யார்: நடந்தது என்ன ?
இன்றைய தினம்(12) அதிகாலை 3.30 மணியளவில், கண்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட டி.எஸ்.சேனாநாயக்க வீதியில் உள்ள தங்க ஆபரண விற்பனை நிலையங்கள் இரண்டும் ஹாட்வெயார் விற்பனை நிலையங்கள் இரண்டும் தீப்பிடித்து எரிந்துள்ளது. இத் தீயை அணைக்க மக்கள் கூடியவேளை, அங்கிருந்து வெளியே வந்த தமிழர் ஒருவர், மீண்டு கடைக்கு அருகாமையில் சென்று விழுந்து உயிரைவிட்டுள்ளார். 35 வயதுடைய பெரியண்ணன் நகுலேஸ்வரன் என்பரே சடலமாக மீட்கப்பட்ட நபராவார்இவர் நெருப்பில் இறக்கவில்லை என்றும் சயனைட் என்னும் கடும் விஷத்தை சாப்பிட்டதால் இறந்துள்ளார் என்றும், சற்று முன்னர் வெளியாகியுள்ள மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பிட்ட நபர் முதலில் சயனைட் வில்லையை சாப்பிட்டு, பின்னர் கடைக்கு தீ வைத்துள்ளார்.

பின்னர் வெளியே வந்தவேளை, அவரை மக்கள் பார்த்துவிட்ட்னர். இதனையடுத்து மீண்டும் கடை நோக்கி ஓடிச் சென்ற இவர், திரும்பவும் சயனைட் வில்லையை மேலதிகமாகக் கடித்துள்ளார். இதன் காரணமாக இவர் இறந்துள்ளார் என்று அறியப்படுகிறது. இவர் நஞ்சருந்தியதை சிலர் பார்த்தாகவும் பொலிசாரிடம் கூறியுள்ளார்கள். குறிப்பிட்ட நபருக்கு சயனைட் வில்லை எப்படிக் கிடைத்தது என்பது தொடர்பாக பொலிசார் தீவிரவிசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை, உயிரிழந்த நபர் தங்கமுலாம் பூசுபவர் என்றும் தங்க ஆபரண விற்பனை நிலைய உரிமையாளருடன் ஏற்பட்டுள்ள பிரச்சினையால் வர்த்தக நிலையத்திற்கு தீ வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.