பக்கங்கள்

பக்கங்கள்

31 டிச., 2012


40 தொகுதிகளிலும் அதிமுக போட்டி :
 அதிமுக செயற்குழு கூட்டத்தின் தீர்மானம்


அ.தி.மு.க. செயற் குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு தொடங்கியது.  சென்னை அருகே உள்ள வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் இக்கூட்டம் நடக்கிறது.
 

கட்சியின் பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயல லிதா முன்னிலையில் நடைபெறும் இந்த கூட்டத்திற்கு அவைத்தலைவர் மதுசூதனன் தலைமை வகிக்கிறார்.

முதலில் செயற்குழு கூட்டமும் அதன்பிறகு பொதுக்குழு கூட்டமும் நடைபெறுகிறது. வருகின்ற பாராளு மன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக போட்டியிடும்.   40 தொகுதிகளிலும் வெற்றி பெற பாடுபட வேண்டும் என்று செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  

 டெல்லியில் தேசிய வளர்ச்சி குழு கவுன்சில் அவமதித்ததற்கு கண்டனம், தமிழ்நாட்டில் மின்சார உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்பன உட்பட 26 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.