பக்கங்கள்

பக்கங்கள்

31 டிச., 2012



யாருடனும் கூட்டணி இல்லை : ஜெயலலிதா
அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா, 2014ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக யாருடனும்
கூட்டணி வைக்காமல் தனித்தே போட்டியிடும் என்று கூறியுள்ளார்.



 பொதுத் தேர்தலில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளை அதிமுக நம்பப்போவதில்லை. தனித்தே போட்டியிடும். அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும், தமிழக அரசின் சாதனைகளை மக்களுக்கு தெரிவித்தும், மின் வெட்டு மற்றும் காவிரி பிரச்னை குறித்து மக்களுக்கு எடுத்துக் கூறியும் புரிய வைக்க வேண்டும்.
நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக மகாத்தான வெற்றியைப் பெறும் என்று கூறியுள்ளார்.