பக்கங்கள்

பக்கங்கள்

4 டிச., 2012


கோத்தகிரி : பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து 6 பேர் பலி -பலி எண்ணிக்கை உயரும் அச்சம்
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி - மேட்டுப்பாளையம் செல்லும் தனியாருக்குச் சொந்தமான கடைசி மினி பஸ் ஒன்று கிளம்பிச் சென்றது. கடைசி பஸ் என்பதால் அதில் 85 பேர் இருந்துள்ளனர். அதிக கூட்டம் காரணமாக பஸ் தடுமாறியபடி சென்றது. 


பனி மூட்டம் வேறு இருந்துள்ள நிலையில், கோட்டக்கம்பை அருகே வளைவில் திரும்பும்போது பஸ் நிலை தடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.
 இந்த விபத்தில் 4 ஆண்கள், 2 பெண்கள் என 6 பேர் பலியானார்கள். மேலும் 26 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த பயணிகள் கோத்தகிரி அரசு தனியார் மருத்துவமனை, உதகை மருத்துவமனை, மேட்டுப்பாளையம், கோவை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து நடந்த இடதில் விளக்கு வெளிச்சமோ, மின் விளக்குகளோ இல்லை என்பதால், மீட்புப் பணியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்த மீட்புக் குழுவினர், தீயணைக்கும் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். விபத்து மிகவும் மோசமான ஒன்றாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்று தெரிகிறது.