பக்கங்கள்

பக்கங்கள்

31 டிச., 2012



கமலை வாழவிடுங்கள்; அவரை சீண்டி பார்க்காதீர்கள் :  பாரதிராஜா

‘விஸ்வரூபம்’ படம் டி.டி.எச்.களில் ஒளிபரப்பப்படுவதை எதிர்க்கும் தியேட்டர் அதிபர்களுக்கு டைரக்டர் பாரதிராஜா கண்டனம் தெரிவித்தார். 
இது குறித்து சென்னையில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.  


அப்போது அவர்,  ‘’ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு விஷ பரீச்சை உண்டு. கமல் இப்போது அந்த பரீட்சையில் இறங்குகிறார். ‘விஸ்வரூபம்’ படம் டி.டி.எச்.யில் வரக்கூடாது என்கின்றனர்.

இந்த படத்தை கமல் செலவு செய்து எடுத்துள்ளார். அதை எப்படி வியாபாரம் செய்ய வேண்டும் என்பது அவருக்கு உள்ள உரிமை. அதில் யாரும் தலையிடக்கூடாது. 
சிவாஜி, கமல், இளையராஜா போன்றோர் தமிழகத்தின் பொக்கிஷங்கள். கமலை கோவணம் கட்டி நடிக்க வைத்தேன். அப்போது பெரிய நடிகராக இருந்தார். ஆனாலும் கேரக்டரு க்காக சொன்ன உடனேயே கோவனத்துக்கு மாறினார். அவருக்கு வேறு தொழில் தெரியாது. சினிமாவிலேயே வாழ்கிறார். 
கமல் நடிப்பதோடு மட்டுமல்ல சினிமாவில் சிறந்த டெக்னீஷியனாகவும் மாறி உள்ளார். ‘விஸ்வரூபம்’ படத்தை எனக்கு திரையிட்டு காட்டினார். பிரமிப்பாக இருந்தது. புதிய தொழில் நுட்பங்களை புகுத்தி இருந்தார். ஒரு தமிழன் உலக அளவிலான தொழில் நுட்ப விஷயங்களை தெரிந்து வைத்திருப்பது பெருமையாக இருந்தது. அவரை சீண்டி பார்க்காதீர்கள். வாழ விடுங்கள்’’என்று கூறினார். 
தயாரிப்பாளர் சங்க தலைவர் எஸ்.ஏ. சந்திர சேகரன், ’’கமல் ரிஸ்க் எடுப்பார். அதில் ஜெயிக்கவும் செய்வார். டி.டி.எச்.களில் ‘விஸ்வரூபம்’ வருவதை எல்லோரும் விரும்புகிறார்கள். திரையுலகம் அவருக்கு ஆதரவு தெரிவிக்கிறது’’ என்றார்.