பக்கங்கள்

பக்கங்கள்

6 டிச., 2012


இலங்கையில் காணப்படும் மனித உரிமை மீறல் மற்றும் நீதிச் சுதந்திரத்துக்கு சவால்விடப்படும் சம்பவங்கள் தொடர்பில் தமது அக்கறையை வெளிப்படுத்தி ஐரோப்பிய ஒன்றியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
"இலங்கையில் சட்டத்தின் ஆட்சி மற்றும் தனிநபர்களின் சுதந்திரம் போன்ற விடயங்களில் அண்மைக்காலத்தில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் தொடர்பில் கொழும்பிலுள்ள ஐரோப்பிய
ஒன்றியப் பிரதிநிதிகள் தமது கரிசனையைச் செலுத்தியுள்ளார்கள்.

நீதித்துறையின் சுயாதீனம் பாதுகாக்கப்படுவதுடன், வெலிக்கடைச் சிறைச்சாலையில் இடம்பெற்றுள்ள பாரிய படுகொலைகள் தொடர்பாக துரிதமானதும், பக்கசார்பற்றதுமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதையும், மாணவர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் எந்தவிதமான தடைகளும் இல்லாமல் தமது அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்பதையும் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்துகின்றது" என இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது