பக்கங்கள்

பக்கங்கள்

6 டிச., 2012



யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபை கோரியுள்ளது. 
அண்மையில் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.

பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினால் கடந்த 1ம் திகதி நான்கு பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது. இவர்கள் வவுனியா சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், இவர்கள் துன்புறுத்தப்படக் கூடிய அபாயம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளது.
குறித்த மாணவர்களுக்கு எதிராக உத்தியோகபூர்வமாக குற்றச்சாட்டுக்ளக் சுமத்தப்பட்டுள்ளனவா என்பது தெரியவில்லை என மன்னிப்புச் சபை அறிவித்துள்ளது. இதேவேளை, கைது செய்யப்பட்ட நான்கு மாணவர்களில் ஒருவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.