பக்கங்கள்

பக்கங்கள்

6 டிச., 2012


ஜெனீவாவில், சிறிலங்காவை காப்பாற களமிறங்கும் ரஷ்யா

இச்சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட ரஷ்ய உயர்ஸ்தானிகர்,
ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைப் பேரவை அமர்வில் தனது நாடு பங்கு கொள்ளாவிடினும் சிறிலங்கா அரசினைப் பாதுகாப்பதற்கான அனைத்து உதவிகளையும்
வழங்குமென ரஷ்யா தெரிவித்துள்ளது.
ரஷ்யாவுக்கான புதிய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள அலெக்ஸ்சாண்டர் கர்ச்சாவா, அமைச்சர் விமல் வீரவன்சவைச் சந்தித்த போதே இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.
ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் பேரவை அமர்வில் தனது நாடு பங்கேற்க முடியாது விட்டாலும் 2014 ஆம் ஆண்டில் இடம்பெறும் அமர்வில் பங்கு கொள்ள நாம் எதிர்பார்க்கிறோம்.
இருப்பினும் மனித உரிமைப் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் அதனைப் பாதுகாக்கும் பொறுப்பினை நாம் முன்னெடுப்போம்.
இதன் ஒரு கட்டமாக, மார்ச் மாத மனித உரிமைப் பேரவை அமர்வில் அங்கம் வகிக்கக் கூடிய ரஷ்ய ஆதரவு நாடுகளுடன் நாம் கலந்துரையாடி சிறிலங்காவுக்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்குமாறு கோரவுள்ளோம் என தெரிவித்துள்ளார்.
பிரேசில் உட்பட பல நாடுகள் அங்கம் வகிக்கும் பிரிக் அமைப்பின் ஒத்துழைப்பை பெற்று கொள்ளவும் ரஷ்யா தயாராக உள்ளதென ரஷ்ய தூதுவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.