பக்கங்கள்

பக்கங்கள்

6 டிச., 2012


ம.தி.மு.க.வில் நடிகர் வடிவேலு?: வைகோ கூட்டத்தில் பங்கேற்பதாக பரபரப்பு

காமெடி நடிகர் வடிவேலு கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். இதனால் தேர்தலுக்கு பிறகு பட வாய்ப்புகள் இல்லாமல் போனது. இயக்குனர்கள் ஓரம் கட்டினர்.

இந்த நிலையில் வடிவேலு ம.தி.மு.க.வில் சேரப்போவதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. திருச்சியில் நாளை “நாடாளுமன்றத்தில் வைகோ” என்ற நூல் வெளியீட்டு விழா நடக்கிறது. இதில் வைகோ பங்கேற்கிறார்.
இதற்கான அழைப்பிதழில் வடிவேலு பெயரும் இடம் பெற்றுள்ளது. எனவே வைகோ முன்னிலையில் அவர் ம.தி.மு.க.வில் சேருவார் என செய்தி பரவி உள்ளது.