பக்கங்கள்

பக்கங்கள்

21 டிச., 2012


ஐரோப்பாவிற்கு விஜயம் செய்ய உள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க இரண்டு வாரங்கள் அங்கு தங்கியிருப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் பாரியார் மைத்திரி விக்ரமசிங்கவும் இந்த விஜயத்தில் இணைந்து கொள்வார் எனக் குறிப்பிடப்படுகிறது.

ரணிலின் ஐரோப்பிய விஜயம் இன்று ஆரம்பமாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விஜயமானது தனிப்பட்ட ரீதியான விஜயம் எனவும் உத்தியோகபூர்வமான விஜயமல்ல எனவும் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறெனினும், புனித பாப்பாண்டவர் 16ம் பெனடிக் ஆண்டகை மற்றும் சில ஐரோப்பிய அரசியல் தலைவர்களைகளை ரணில் விகரமசிங்க சந்திப்பார் என எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத் தகவல்கள் தெரிவிக்கின்றன.