பக்கங்கள்

பக்கங்கள்

21 டிச., 2012


இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக அவுஸ்திரேலியாவில் ஆர்ப்பாட்டம்!
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் சுயாதீன விசாரணைக்கு இலங்கை அரசாங்கம் இணங்கும் வரையில் அந்த நாட்டு கிரிக்கெட் அணியுடன் விளையாடுவதை அவுஸ்திரேலிய அரசாங்கமும் கிரிக்கெட் சபையும் நிறுத்திக்கொள்ள வேண்டும்
என்று கோரிக்கை விடுக்கப்படடுள்ளது.
அவுஸ்திரேலியாவின் தமிழ் அகதிகள் சபை இந்தக்கோரிக்கையை விடுத்துள்ளது. இதனை வலியுறுத்தும் முகமாக எதிர்வரும் புதன்கிழமை தமிழர்கள் எம்சிஜி மைதானத்தில் முற்பகல் 9 மணிக்கு ஆர்ப்பாட்டத்தை நடத்துவர் என்று தமிழ் அகதிகள் சபையின் சட்டத்தரணி மால் பாலா தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பாதிப்படுகின்றபடியால்தான் தமிழர்கள் அவுஸ்திரேலியாவுக்கு வருகின்றனர். இதனை அவுஸ்திரேலிய அரசாங்கம் உணரவேண்டும் என்று பாலா குறிப்பிடடுள்ளார்.
இதேவேளை தமிழர்கள் எதிர்வரும் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தவுள்ளமையை தாம் அறிந்துள்ளதாக விக்டோரியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும் எந்த ஒரு சமூகமும் தமது கருத்துக்களை அமைதியான முறையில் மேற்கொள்வதற்கு உரிமையுள்ளதாக விக்டோரியாவின் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.