பக்கங்கள்

பக்கங்கள்

13 டிச., 2012


க.பொ.த.சாதாரணதரப் பரீட்சையில் 46 முன்னாள் புலிப்போராளிகள்

இம்முறை இடம்பெறுகின்ற க.பொ.த.சாதாரணதரப் பரீட்சையில் புனர்வாழ்வளிக்கப்பட்ட 46 முன்னாள் விடுதலைப் புலிப்போராளிகள் தோற்றுகின்றனர்.


இவர்கள் அனைவரும் 2009 ஆண்டு இடம்பெற்ற இறுதியுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்களாவர்.இவர்களுக்காக வவுனியா மத்திய கல்லூரியில் விசேட பரீட்சை மண்டபமொன்று அமைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்று ஆரம்பமாகிய கா.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் நாடு பூராகவும் 4048 நிலையங்களில் 542,260 பரீட்சார்த்திகள் பரீட்நைக்குத் தோற்றுகின்றனர். இதில் 387,593 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் என்பது குறிப்பிடத்தக்கது
.