பக்கங்கள்

பக்கங்கள்

4 டிச., 2012

மாரடைப்பு காரணமாக இன்று காலை மரணமடைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவருமான மொஹமட் மஹ்ரூபின் உடலுக்கு ஜனாதிபதி உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.

இதேவேளை, மஹ்ரூபின் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, சுசில் பிரேம்ஜயந்த, ஏ.எச்.எம்.பௌசி, பாராளுமன்ற உறுப்பினர்களான சஜித் பிரேதமதாச,
திஸ்ஸ அத்தநாயக்க, கரு ஜயசூரிய, டிரான் அலஸ், ஏ.எச்.எம்.அஸ்வர், கொழும்பு மாநகர மேயர் ஏ.ஜே.எம்.முஸம்மில், மற்றும் பல அரசியல் பிரமுகர்களும் முக்கியஸ்தர்களும் அன்னாரது இல்லத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினர்.

இதேவேளை, மஹ்ரூபின் உடல் மாளிகாவத்தை முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

படங்கள் : கே.சுஜீவகுமார்