பக்கங்கள்

பக்கங்கள்

8 டிச., 2012


நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிடம் வெளிப்படைத் தன்மையை பேணுமாறு அமெரிக்கா வலியுறுத்தல்
பிரதம நீதியரருக்கு எதிரான நாடாளுமன்றத் தெரிவுக்குழு வெளிப்படைத்தன்மை மற்றும் உரிய ஒழுங்கு முறைமையை பேண வேண்டும் என்று கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் வலியுறுத்தியுள்ளது.


இது தொடர்பில் அமெரிக்க தூதரகம் சற்று முன்னர் வெளியிட்ட ஊடக அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையின் நீதித்துறையின் தற்போதைய நிலைமை மற்றும் பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணை கையாளப்படுகின்ற முறைமை தொடர்பாக அமெரிக்கத் தூதரகம் ஆழ்ந்த கரிசனை கொண்டுள்ளது.
எந்தவொரு விசாரணையும் வெளிப்படைத் தன்மையுடனும், உரிய ஒழுங்கு முறைக்கு உத்தரவாதமளிப்பதாகவும், சட்டத்தின் ஆட்சிமுறைமைக்கு இணங்கியதாகவும் முன்னெடுக்கப்பட வேண்டும் என இலங்கை அரசாங்கம் மற்றும் பிரதம நீதியரசருக்கு எதிராக விசாரணைகளை முன்னெடுக்கின்ற பாராளுமன்றத் தெரிவுக்குழுவிடமும் அமெரிக்க தூதரகம் வலியுறுத்தியுள்ளது.