பக்கங்கள்

பக்கங்கள்

28 டிச., 2012


கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மன்னார் ஆகிய மாவட்டங்களில்அனைத்துக் குளங்களும் நிரம்பி வழிகின்றன. ஆறுகள் பெருக்கெடுத்துப் பாய்கின்றன. 
இதனால் வீதிப்போக்குவரத்து பல இடங்களிலும் தடைப்பட்டுள்ளது. நேற்றிரவு தகவல்களின் படி சில குளங்களின் நீர்மட்டமும் அவற்றில் இருந்து வெளியேறும் நீர் மட்டமும் வருமாறு.. கிளிநொச்சி மாவட்டத்தில் அக்கராயன்குள நீர்மட்டம் 26 அடி 2 அடி வான் பாய்கிறது. கல்மடுக்குளம் 26 அடி 2 அடி வான்பாய்கிறது. பிரமந்தனாறுகுளம் 13 அடி 6 அங்குலம் ஒரு அடி 6 அங்குலம் வான்பாய்கிறது. புதுமுறிப்புக்குளம் 17 அடி 8 அங்குலம் ஒரு அடி 2 அங்குலம் வான்பாய்கிறது. கனகாம்பிகைக்குளம் 11 அடி 3 அங்குலம் ஒரு அடி 3 அங்குலம் வான்பாய்கிறது. வன்னேரிக்குளம் 10 அடி 3 அங்குலம் 9 அங்குலம் வான்பாய்கிறது. வவுனிக்குளத்தின் நீர் மட்டம் 27 அடி 2 அடி வான் பாய்கிறது. ரென்னியன்குளம் 11 அடி 5 அங்குலம் வான் பாய்கிறது. ஐயங்கன்குளம் 13 அடி 6 அங்குலம் வான்பாய்கிறது. அம்பலப்பெருமாள் குளம் 10 அடி 5 அங்குலம் வான் பாய்கிறது. கோட்டைகட்டிய குளம் 9 அடி 7 அங்குலம் வான் பாய்கிறது. மல்லாவிக்குளம் 11அடி 5 அங்குலம் வான்பாய்கிறது. மருதங்குளம் 11 அடி 8 அங்குலம் வான்பாய்கிறது. கல்விளான்குளம் 11 அடி 9 அங்குலம் 4 அங்குலம் வான்பாய்கிறது. கொல்லவிளான் குளம் 11 அடி 6 அங்குலம் 6 அங்குலம் வான்பாய்கிறது. பனங்காமம்குளம் 9 அடி 5 அங்குலம் வான்பாய்கிறது. பழைய முறிகண்டிக்குளம் 9 அடி 6 அங்குலம் 6 அங்குலம் வான்பாய்கிறது. தேறாங்கண்டல் குளம் 11 அடி 6 அங்குலம் 4 அங்குலம் வான்பாய்கிறது.