பக்கங்கள்

பக்கங்கள்

28 டிச., 2012


இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபாய ராஜபக்‌ஷவின் நேரடிக் கட்டுப்பாட்டில் செயற்படும் பயங்கரவாத விசாரணைப் பிரிவு (TID) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை விசாரணை ஒன்றுக்கு ஆஜராகுமாறு அவசர அழைப்பாணை ஒன்றை அனுப்பிவைத்திருக்கின்றது.
கொழும்பிலுள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவின் தலைமையகத்தில் நாளை சனிக்கிழமை ஆஜராகுமாறு இந்த அழைப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அறியவந்திருக்கின்றது. கொழும்பிலுள்ள கஜேந்திரகுமாரின் இல்லத்தில் இந்த அழைப்பாணை நேற்று வியாழக்கிழமை மாலை கையளிக்கப்பட்ட
து. இருந்த போதிலும், தற்போது வெளிநாட்டில் உள்ள கஜேந்திரகுமார் நாளை விசாரணைக்கு செல்வாரா என்பது தெரியவில்லை.

நாளை விசாரணைக்கு ஆஜராகுமாறு கோரும் இந்த அழைப்பாணை சிங்கள மொழியில் மட்டுமே இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருந்தபோதிலும் விசாரணைக்கு அழைக்கப்பட்டமைக்கான காரணம் எதுவும் அதில் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உருவாகியிருக்கும் குழப்ப நிலையைத் தொடர்ந்து பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ச்சியாக பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் விசாரணைக்குள்ளாக்கப்பட்டுவருவது தெரிந்ததே. அண்மையில் மன்னார் மாவட்ட ஆயர் ராயப்பு ஜோசெப், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் ஆகியோரும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் விசாரணைக்குள்ளாக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Add Comment