பக்கங்கள்

பக்கங்கள்

2 ஜன., 2013



அழகிரி பேட்டி எதிரொலி! அதிமுக சுவர் விளம்பரங்களை அழித்த திமுகவினர் மீது வழக்கு

புத்தாண்டையொட்டி நேற்று (01.01.2013) மதுரையில் செய்தியாளர்களை மத்திய அமைச்சர் மு.க.அழகிரி சந்தித்தார். அப்போது பேசிய அவர், பிப்ரவரி மாதம் வரும் ஜெயலலிதாவின் பிறந்த நாள் சுவர் விளம்பரம் இருக்கிறது. ஆனால் ஜனவரியில் வரும் எனது பிறந்த நாள் சுவர் விளம்பரங்களை அதிமுகவினர் அழித்துள்ளனர். சுவர் விளம்பரங்களை அழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் அதிமுகவினரின் சுவர் விளம்பரங்களையும் அழிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளோம். இல்லையென்றால் திமுகவினரே அழிப்பார்கள் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு 77வது வார்டில் ஜெய்கிந் புரம் மார்க்கெட் சுவரில் எழுதப்பட்டிருந்த ஜெயலலிதா பிறந்த நாள் சுவர் விளம்பரத்தை அழித்தாக அந்த பகுதி அதிமுக வட்டச் செயாளர் ராஜேந்திரன் போலீசில் புகார் அளித்துள்ளார். திமுக மாவட்ட பொருளாளரும், முன்னாள் துணை மேயருமான மிசா பாண்டியன், அனஞ்சி நாகேந்திரன், டிரைவர் முத்து, கோம்கார்டு குமார், மாணிக்கம் ஆகியோர் மீது அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

அந்த மனுவை பெற்ற போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.