பக்கங்கள்

பக்கங்கள்

2 ஜன., 2013


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் நாளை நீதிமன்றில் ஆஜராவார்
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க மீதான குற்றப்பிரேரணை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணையை ஏற்று நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் நாளை நீதிமன்றில் ஆஜராவார் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம் வகித்த அரசாங்க உறுப்பினர்களும் ஐ.தே.க. உறுப்பினர்களும் நீதிமன்றத்தில் ஆஜராகமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவின் ரீட் மனு நாளை மேன்முறையீட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இவ்விசாரணைக்கே அரச தரப்பினரும் ஐ.தே.கவும் ஆஜராகமாட்டார்கள் என அக்கட்சிகளின் உறுப்பினர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.