பக்கங்கள்

பக்கங்கள்

10 ஜன., 2013




தமிழ்நாட்டுக்கு தண்ணீர் விட கர்நாடகத்துக்கு உத்தரவிடமுடியாது! காவிரி கண்காணிப்புக்குழு கைவிரிப்புதமிழ்நாட்டுக்கு தொடர்ந்து தண்ணீர் திறந்து விட கர்நாடகத்துக்கு உத்தரவிடமுடியாது என நீர் திறந்துவிடக் கோரிய தமிழகத்திடம் காவிரி கண்காணிப்புக் குழு!

 கைவிரித்துள்ளது.
கர்நாடக அணையில் உள்ள 16 டிஎம்சி நீர் மே 31 வரை குடிநீருக்கு தேவையானதாகும். குடிநீருக்காக வைத்துள்ள நீரை திறந்து விடுமாறு கர்நாடகத்து:ககு உத்தரவிடமுடியாது என கூட்டத்துக்கு பின்னர் காவிரி கண்காணிப்புக் குழு தலைவர் துருவ விஜய் சிங் கூறியுள்ளார். 
ஜனவரியில் காவிரியில் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய பங்கு 1.51 டிஎம்சி ஆகும். ஆனால் கர்நாடகம் திறக்காமலேயே மழை மூலம் 1.6 டிஎம்சி மேட்டூர்  வந்துள்ளது. ஜனவரியில் வரவேண்டிய நீர் தமிழகத்திற்கு கிடைத்துவிட்டதாக துருவ விஜய் கூறியுள்ளார்.