பக்கங்கள்

பக்கங்கள்

10 ஜன., 2013


இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக அணி திரளும் ஈ.பி.டி.பியின

ஈழம் மக்கள் ஜனநாயக முன்னணியின் தலைவரும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா நான்கு வயது குழந்தை மீதான பாலியல் வண்புணர்வு மற்றும் கொலையினை கண்டித்து இராணுவத்திற்கு எதிராக வியாழக்கிழமை ஆர்பாட்டம் நடாத்தினார்.
ஆர்ப்பாட்டத்தின் பொழுது “புலிக் கொடியை ஏற்றிய சந்தேகநபர்களை விரைவாக கைது செய்த இராணுவம் ஏன் கொலையாளிகளை இன்னும் கைது செய்யவில்லை” எனவும் ஈ.பி.டி.பியினர் கோசம் எழுப்பினர்.
கடந்த மாதம் 27ம் திகதி  சுதாரனி குணசேகரம் எனும் நான்கு வயது சிறுமி, மண்டை தீவிலுள்ள அவரது இல்லத்தில் இருந்து காணமல் போயிருந்தார். இவரது உடல் பாழடைந்த கிணற்றிலிருந்து மறுநாள் மீட்கப்பட்டது. மரண விசாரனைகளின் பொழுது குழந்தை பாலியல் வண்புனர்விற்குட்பட்டமை நிரூபிக்கப்பட்டது.
இதேபானியிலான மரணம் கடந்த காலத்தில் நெடுந்தீவிலும் பதிவாகியது.
யாழ் தீவகப்பகுதிகளில் அரசியல் மற்றும் சிவில் நடவடிக்கைகளில் நேரடியாக ஆதிக்கம் செலுத்துகின்ற ஈ.பி.டி.பியினர் இலங்கை இராணுவத்திற்கெதிராக “ரோஜாவன சிறுவர் கழகம்” எனும் பெயரில் ஆர்ப்பாட்த்தை முன்னெடுத்தனர்.
அரச அதிகாரிகள், 300ற்கும் மேற்பட்ட பொது மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் இவ்வார்ப்பாட்டத்தில் பங்குபற்றினர். மேலும் அமைச்சர் தேவானந்தா, தனிப்பட்ட முறையில் அதிகாரிகளைத் தொடர்புக் கொண்டு இவ்வார்ப்பாட்டத்தில் கலந்துக்கொள்ள கூறியதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவித்தன.
புனித. பேதுரு ஆலய முன்றலில் ஆரம்பித்த இவ்வார்ப்பாட்ட பேரணி மண்டைத்தீவு பொலிஸ் நிலையம் முன்பாக நிறைவடைந்தது. ஆர்ப்பாட்டத்தின் பொழுது இலங்கை இராணுவத்திற்கெதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இவ்வாறன ஓர் நிலையில் பொலிஸார் 31 வயதான ஈ.பி.டி.பி ஆதரவாளரையே இக்கொலையின் பிரதான சந்தேக நபராக கைதுச் செய்தனர். ஆயினும் இக்கைது தொடர்பில் ஊடக்கத்துறையினர் பொலிஸாரிடம் வினவிய பொழுது அவர்கள் முற்றாக மறுத்தனர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சிறிலங்கா சுதந்திர முன்னணி கட்சியுடன் நெருங்கிய உறவினைப் பேணுகின்ற ஈ.பி.டி.பியினர் அண்மைக் காலமாக இலங்கை இராணுவத்தினரால் ஓரங்க்கட்டப்படும் நிலை காணப்படுகின்றது.