பக்கங்கள்

பக்கங்கள்

8 ஜன., 2013


வெள்ளை வானில் கடத்திச் செல்லப்பட்ட இளைஞன் 19 நாட்களின் பின் விடுதலை!- யாழில் சம்பவம்
யாழ். வட்டுக்கோட்டை பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெள்ளை வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் நேற்று முன்தினம் வீடு திரும்பியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இணுவில் பகுதியிலுள்ள மாமனார் ஒருவருடன் தர்க்கப்பட்டுக் கொண்டு பொலிஸிற்கு விளக்கமளிக்கச் செல்வதற்காக பேருந்தை பார்த்துக் கொண்டிருந்த சமயம் வட்டுக் கோட்டை சந்தியில் வைத்து குறித்த இளைஞர் வெள்ளை வாகனத்தில் கடத்தப்பட்டார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் யாழ்.பொலிஸார் மற்றும் மனிதவுரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு கொடுக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து. 19 நாட்களின் பின்னர் குறித்த இளைஞர் வீடு திரும்பியிருக்கின்றார்.
வட்டுக்கோட்டை சங்கரத்தையைச் சேர்ந்த யோகேஸ்வரன் அருள்ஜீவன் (வயது 29) என்றவரே இவ்வாறு கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டவர்.
மேலும் யாழ். மனிதவுரிமைகள் ஆணைக்குழுவில் வாக்குமூலம் கொடுத்திருந்த இளைஞர், தம்மை கடத்தியவர்கள் தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாதெனவும். அவர்கள் தம்மை நாகரீகமாக நடத்தினர் எனவும் குறிப்பிட்டிருக்கின்றார்.
எனினும் சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.