பிபாவின் சிறந்த கால்பந்து வீரர் விருதை பெற்றார் மெஸ்சி |
பிபா சிறந்த வீரர் என்ற விருது வழங்கும் விழா சுவிட்சர்லாந்தில் உள்ள சூரிச் நகரில் நடைபெற்றது.
கால்பந்து அரங்கில் திறமையாக செயல்படும் வீரர்களுக்கு, பிபா சிறந்த வீரர் என்ற விருது வழங்கப்படுகிறது.
இதன்படி, இதற்கான இறுதிப்பட்டியலில் பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி, இவரது சகவீரர் இனியஸ்டா, ரியல் மாட்ரிட் அணியின் அணித்தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் இடம்பெற்றனர்.
முடிவில், பார்சிலோனா அணியின் மெஸ்சி இந்த விருதுக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இதன் மூலம் தொடர்ந்து நான்காவது முறையாக இவ்விருதினை வென்று சாதனை படைத்துள்ளார். ஏற்கனவே 2009, 10, 11ம் ஆண்டுகளில் பெற்றுள்ளார்.
இந்த விருதுக்கான வீரர்களை தெரிவு செய்ய பயிற்சியாளர்கள் சர்வதேச கால்பந்து அணியின் அணித்தலைவர்கள், தெரிவு செய்யப்பட்ட பத்திரிகையாளர்கள் வாக்களிப்பர்.
இதில் மெஸ்சிக்கு 41.60, ரொனால்டோ 23.68, இனியஸ்டா 10.91 சதவீதம் கிடைத்துள்ளன.
இது குறித்து மெஸ்சி கூறுகையில், இந்த விருதை நான்காவது முறையாக பெறுவதை நினைத்து, வியப்பாக உள்ளது. இதற்காக என் சக வீரர்கள், நண்பர்கள், என் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
இதற்கு முன்னர், முன்னாள் பிரெஞ்ச் நட்சத்திரம் மைக்கேல் பிளாட்டினி, டச்சு வீரர்கள் ஜோகன் கிரியு மற்றும் மார்கோ வான் பாஸ்டன் ஆகியோர் மூன்று முறை இந்த விருதை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
all-star squad: Iker Casillas (Spain) in goal; Dani Alves (Brazil), Marcelo (Brazil), Gerard Piqué (Spain) and Sergio Ramos (Spain) in defence; Xabi Alonso (Spain), Andrés Iniesta (Spain) and Xavi Hernández (Spain) in midfield; and Cristiano Ronaldo (Portugal), Radamel Falcao (Colombia) and Lionel Messi (Argentina)
US player Abby Wambach claimed her first FIFA Women’s World Player Vicente del Bosque added the European title to his 2010 FIFA World Cup
|
பக்கங்கள்
▼
பக்கங்கள்
▼