பக்கங்கள்

பக்கங்கள்

18 ஜன., 2013

ரயில்வே ஊழியர்கள் சம்பளப் பிரச்சினை உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் 22ஆம் திகதி முதல் 56 மணிநேர வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

இதேவேளை, புகையிரத தொழிற்சங்க கூட்டமைப்பு, சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு வழங்காவிடில் தாம் 22ஆம் திகதி வேலைநிறுத்தப் போராட்டத்தில்
ஈடுபடவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கமவிடம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சங்கத்தின் தலைவர் தெரிவிக்கையில்,
மேற்படி வேலை நிறுத்தப்போராட்டம் எதிர்வரும் 22ஆம் திகதி நள்ளிரவு ஆரம்பமாகி 24 ஆம் திகதி காலை வரை தொடரும் என அவர் தெரிவித்தார்.

இதேவேளை, ரயில்வே ஊழியர்களின் சம்பளப் பிரச்சினை நீண்ட காலத்திற்கு அதிகரிக்கப்படாமல் உள்ளமை குறிப்பிடத்தக்கது.