பக்கங்கள்

பக்கங்கள்

19 ஜன., 2013


3வது ஒருநாள் போட்டி: இந்தியா வெற்றி
ராஞ்சியில் நடந்த மூன்றாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது.

இன்று நடந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் தோனி பந்துவீச தீர்மானித்தார். இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 42.2 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. இங்கிலாந்து அணி சார்பில் ரூட் 39 ரன்களும், பெல், பிரஸ்னன் ஆகியோர் தலா 25 ரன்கள் எடுத்தனர்.
இந்திய அணி தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்களையும், அஸ்வின், இஷாந்த் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். இதன் பின்னர் 156 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. துவக்க வீரராக வந்த ரஹானே ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டானார். காம்பீருடன் கோஹ்லி ஜோடி சேர்ந்தார். இருவரும் இரண்டாவது விக்கெட்டுக்கு 67 ரன்கள் சேர்த்தனர். இந்தியா 78 ரன்கள் எடுத்திருந்த நிலையில் காம்பீர் 33 ரன்களுக்கு அவுட்டானார். இதன் பின்னர் கோஹ்லி அரைசதமடித்தார். அதிடியாக விளையாடிய யுவராஜ் சிங் 30 ரன்னில் போல்டானார். கோஹ்லியும் தோனியும் ஜோடி சேர்ந்து அணியை வெற்றி பெற வைத்தனர். இந்தியஅணி 28.1 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.