பக்கங்கள்

பக்கங்கள்

19 ஜன., 2013


அமெரிக்கா இல்லையேல் சீனா – இராணுவ பயிற்சி தொடர்பில் கோத்தா!


இலங்கைக்கான இராணுவ பயிற்சிகளை அமெரிக்க வழங்க மறுக்குமேயானால் சீனாவிடம் அவ்வுதவிகளை பெற்றுக்கொள்ள முடியும். இது இலங்கைக்கு பெரிய சவாலான விடயம் அல்ல.எமது இராணுவத்திற்கெதிராக இதைத்தவிர அமெரிக்காவினா
ல் வேறு எதனையும் செய்ய முடியாதென பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பெரும் துயரங்கள் மற்றும் தியாகங்களுக்கு மத்தியில் பெற்றுக்கொள்ளப்பட்ட அமைதியை சீர்குலைக்க இலங்கையை சூழ பல சக்திகள் செயற்படுகின்றன.
இவற்றை எதிர்கொண்டு நாட்டின் அமைதியை தொடர்ந்தும் பாதுக்காக்க வேண்டுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.