பக்கங்கள்

பக்கங்கள்

15 ஜன., 2013



திருவையாறு : தமிழிசை விழா இன்று தொடக்கம்

திருவையாறு அரசர் கல்லூரித் திடலில் 42 ஆம் ஆண்டு தமிழிசை விழா இன்று (ஜனவரி 14) தொடங்கவுள்ளது. தமிழிசை மன்றம் சார்பில் தொடர்ந்து 3 நாள்கள் நடைபெறவுள்ள இந்த விழாவை வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஆர். வைத்திலிங்கம் தொடங்கி வைக்கிறார்.

தொடக்க நாளில் பெருவங்கியம், திருமுறை விண்ணப்பம், பாட்டு, பரதநாட்டியம், வயலின் இசை உள்ளிட்ட இசை நிகழ்ச்சிகளும், பட்டிமன்றமும் நடைபெறவுள்ளன. இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமை (ஜனவரி 15) மத்திய நிதித் துறை இணை அமைச்சர் ச.சு. பழநிமாணிக்கம் விருதுகள் வழங்கிப் பேசுகிறார். மேலும், இசை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

இதில் திரைப்படப் பாடகர் வி.ஆர். மாணிக்க விநாயகம் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. மூன்றாம் நாளான புதன்கிழமை (ஜனவரி 16) சற்குரு தியாக பிர்ம சபா தலைவரும், தமிழிசை மன்றக் காப்பாளருமான ஜி.ஆர். மூப்பனார் சிறப்பு விருதுகள் வழங்கி பாராட்டுரையாற்றுகிறார். பின்னர் திரைப்படப் பாடகர் உன்னிகிருஷ்ணன் பாட்டும், கும்கி திரைப்படப் புகழ் வேடந்தாங்கல் மகிழினி மணிமாறன் குழுவினரின் நாட்டுப்புற இசை விருந்தும் நடைபெறவுள்ளது.