பக்கங்கள்

பக்கங்கள்

15 ஜன., 2013



மீனவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதி: ஜெயலலிதா

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
நாகப்பட்டினம் மாவட்டம் வானவன் மகாதேவி மீனவ கிராமத்தைச் சேர்ந்த வாலையன் என்பவரின் மகன் கமலப்பன், நம்பியார் நகர் மீனவர் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி என்பவரின் மகன் கிருஷ்ணசாமி ஆகிய இருவரும்  கண்ணாடி நாரிழை படகில் தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் அருகில் மீன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.

இறந்த இரு மீனவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.