பக்கங்கள்

பக்கங்கள்

27 ஜன., 2013



திருச்சி சிவா அழைப்பு : கலைஞர் - விஜயகாந்த் சந்திப்பு நிகழுமா?
 

 திருச்சி தேசிய கல்லூரி மைதானத்தில்,  அடுத்த மாதம், 7ம் தேதி, தி.மு.க., - எம்.பி., சிவா மகள் திருமணம் நடக்கவுள்ளது. 
தி.மு.க., தலைவர் கலைஞர் தலைமை ஏற்கும் இவ்விழாவில், அழகிரி, ஸ்டாலின் உள்ளிட்டவர்களும் பங்கேற்கின்றனர். இந்த திருமணத்திற்கான
அழைப்பிதழை, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்திடம், எம்.பி., சிவா, நேரில் வழங்கியுள்ளார். நேரம் இருந்தால், நிச்சயம் திருமணத்திற்கு வருவதாக அவரிடம் விஜயகாந்த் உறுதியளித்துள்ளார்.

அதேநாளில், அரசு தொடர்ந்த அவதூறு வழக்கில் ஆஜராக வேண்டும் என திண்டுக்கல் கோர்ட் விஜய காந்திற்கு உத்தர விட்டுள்ளது. 
திண்டுக்கல் செல்லும் விஜயகாந்த், திருச்சி சென்று, திரும ணத்தில் பங்கேற்று, கலைஞரை சந்தித்து திருப்புமுனையை ஏற்படுத்துவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தி.மு.க., - எம்.பி., இல்ல திருமணத்தில் பங்கேற்பது குறித்து, கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன், விஜயகாந்த் ஆலோசனை நடத்தி வருகிறார்.
 திருமண மேடையில் கலைஞர் இருக்கும்போது பங்கேற் காமல், அவர் புறப்பட்டு சென்றபின், சென்று வாழ்த்து தெரிவிக் கலாம் என்ற யோசனை அவருக்கு தெரிவிக் கப்பட்டுள்ளது. இதன் மூலம், இரு கட்சியி னரிடையே இணக்கத்திற்கான பிள்ளையார் சுழி போடப்படும் என்கிறது அரசியல் வட்டாரம்.