பக்கங்கள்

பக்கங்கள்

1 பிப்., 2013


மும்பையில் 800 தியேட்டர்களில் ‘விஸ்வரூபம்’ ரிலீஸ்
மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் 800 தியேட்டர்களில் இந்தி ‘விஸ்வரூபம்’ நாளை ரிலீசாகிறது.



தமிழகத்தில் ‘விஸ்வரூபம்’ படத்துக்கு தடை விதிக்கப்பட்ட பிரச்னையில் சிக்கியிருந்த நிலையிலும் இந்தியில் அப் படத்தை ரிலீஸ் செய்வதற்கான வேலைகளிலும் மும்முரமாக இருந்தார் கமல். கடந்த சில வாரங்களாக இந்தி பதிப்புக்கான மிக்ஸிங், டப்பிங், ரீ ரிக்கார்டிங் உள்ளிட்ட பணிகள் வேகமாக நடந்து முடிந்தன. 
அனைத்து பணிகளும் நிறைவடைந்து தயார் நிலையில் உள்ள ‘விஸ்வரூபம்’ இந்தி படம் மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் 800 தியேட்டர்களில் நாளை ரிலீசாகிறது. படத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ள நிலையில் தியேட்டர்களும் படத்தை ரிலீஸ் செய்வதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றன.

டெல்லி, புறநகர் பகுதிகளான நொய்டா, குர்கான், பரீதாபாத் உள்ளிட்ட பகுதிகளில் 20 தியேட்டர்களில் வெளியாகிறது. உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், பீகார், ராஜஸ்தான், மேற்குவங்கம், பஞ்சாப், ஒடிசா மாநிலங்களிலும் படம் வெளியாகிறது.