பக்கங்கள்

பக்கங்கள்

1 பிப்., 2013


இனி இது போல் பிரச்சனை வந்தால் நிச்சயமாக நாட்டை விட்டு வெளியேறிவிடுவேன் : மும்பையில் கமல்  பரபரப்பு பேட்டி
 இந்தியில் விஸ்வரூபம் படம் வெளியிடுவது பற்றி இன்று மாலை நடிகர் கமல் மும்பையில் செய்தியாளர்களை சந்தித்தார்.


அப்போது அவர்,  ‘’மும்பை திரையுலகினர் அளித்த ஆதரவுக்கு நன்றி.  ஊடகங்கள் துணை நின்றது நெகிழ்ச்சி அளிக்கிறது.   போராட்டத்தில் நான் தனி ஆள் அல்ல; ஆதரவளிக்கும் ஊடகங்களூக்கு நன்றி.  
கலைஞர்களை அவமதிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.  இனி ஒரு முறை இது போன்ற பிரச்சனையும், நெருக்கடியும் எனக்கு ஏற்பட்டால் நிச்சயமாக நான் நாட்டை விட்டு வெளியேறிவிடுவேன்.  
காந்தியிடம் சென்று வயதானவர்கள் எல்லோரும் இமயம லைக்கு சென்றுவிடுங்கள் என்று சொன்னார்கள்.  அவரோ இதுதான் என் இமயமலை என்று சொல்லிவிட்டார்.  அது மாதிரி இதுதான் என் இடம்.  
ஆஸ்கர் அவார்டுக்காகத்தான் நான் இந்தப்படத்தை எடுத்திருக் கிறேன் என்று விமர்சிக்கப்படுகிறது.  நான் பலமுறை கூறியுள் ளேன்.   எனக்கு ஆஸ்கர் தேவையில்லை. தேசிய விருது போதும்.   விஸ்வரூபம் படம்பார்ப்பவர்கள் படம் சிறப் பாக உள்ளதாக பாராட்டியுள்ளனர்.  
இஸ்லாமிய சமூகத்திடம் இருந்து எனக்கு மிகப்பெரிய ஆதரவு கிடைத்துள்ளது.  அதற்கு என் நன்றி.  விஸ்வரூபம் விவகாரத்தில் முன் வந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா விளக்கம் அளித்தமைக்கு நன்றி’’ என்று கூறினார்.