பக்கங்கள்

பக்கங்கள்

9 ஜன., 2013


கேரளா வழியாக அவுஸ்திரேலியாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கை அகதிகள் கைது
தமிழகத்தில் பல்வேறு முகாம்களில் தங்கி இருந்த இலங்கை அகதிகள் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா தப்பி செல்ல முயன்றபோது தமிழக கியூ பிரிவு பொலிசார் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் மதுரை, இராமேஸ்வரம் மண்டபம் பகுதிகளில் உள்ள பல்வேறு முகாம்களில் தங்கியிருந்த இலங்கை அகதிகள் ஒரு முகவர் மூலம் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா நாட்டிற்கு தப்பி செல்ல திட்டமிட்டனர்.
இதற்கா 28 பெண்கள், 10 ஆண்கள் 13 குழந்தைகள் உட்பட மொத்தம் 51 பேர் 3 வான்களில் குமுளி வழியாக செல்வதாக கேரளா பொலிசார், தமிழக கியூ பிரிவினருக்கு பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து பொலிஸ் அதிகாரி முருகன் தலைமையில், குமுளி சென்று தேக்கடி ரோட்டில் தங்கியிருந்த அகதிகளை கம்பம் கொண்டு வந்து ஒரு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும்
விசாரணைக்கு பிறகு தமிழகத்தில் உள்ள பல்வேறு முகாம்களில் மீண்டும் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.