பக்கங்கள்

பக்கங்கள்

9 ஜன., 2013


யாழில் சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தின் தலையீட்டை கண்ணால் கண்டேன்! பிரான்ஸ் தூதுவர் வாக்குமூலம்
சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தினர் மேற்கொள்ளும் அடாவடித்தனங்களை எனது கண்களாலேயே நான் நேரடியாகக் கண்டு அதிர்ச்சியடைந்தேன் என இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் கிறிஸ்ரின் றொபிசன் யாழ்.மேலதிக அரச அதிபர் திருமதி ரூபினி வரதலிங்கத்திடம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்ட பிரான்ஸ் தூதுவர் கிறிஸ்ரின் றொபிசன் யாழ்ப்பாணத்தில் பல்வேறு தரப்பினரைச் சந்தித்து யாழ்.நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.
காலையில் யாழ்.ஆயர் அதி.வண தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகையைச் சந்தித்துக் கலந்துரையாடி அவர் யாழ்.கடற்கரையோரங்களுக்கும் விஜயம் செய்துள்ளார்.
தொடர்ந்து மாலையில் யாழ்.மேலதிக அரச அதிபர் திருமதி ரூபினி வரதலிங்கத்தையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது கரையோரங்களிலுள்ள மக்களிடம் இராணுவத்தினர் நேரடியாக இறங்கி தகவல்களை சேகரிப்பதை தான் கண்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இவர்கள் அரச அதிகாரிகளையும் அதட்டியதையும் தான் அதனையும் கண்டதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் யாழ்ப்பாணத்தில் சிவில் நிர்வாகத்தில் இராணுவம் மேற்கொள்ளும் தலையீடுகள் தொடர்பாகவும் அவர் அதிகமாக கேட்டறிந்து கொண்டுள்ளதாகத் தெரியவருகின்றது.