பக்கங்கள்

பக்கங்கள்

29 ஜன., 2013


அமெரிக்காவின் பிரேரணையை எதிர்கொள்ள தயார்: இலங்கை அதிரடி அறிவிப்பு

இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் அமெரிக்கா கொண்டுவர இருக்கும் பிரேரணையை எதிர்கொள்ளத் தயார் என இலங்கை அறிவித்துள்ளது. 


பெப்ரவரி மாதம் முதலாம் திகதி தொடங்கவுள்ள ஐநா மனித உரிமை கவுன்ஸில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக போர் குற்ற விசாரணை பிரேரணையை கொண்டுவரவுள்ளதாக ஐக்கிய அமெரிக்கா அறிவித்துள்ளது. 

இந்நிலையில், யுத்த விடயம் குறித்து இலங்கை அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அது குறித்து சர்வதேசத்திற்கு போதியளவு விளக்கமளித்துள்ளதாகவும் இலங்கை வெளிவிவகார செயலாளர் கருணாதிலக அமுனுகம தெரிவித்துள்ளார். 

அமெரிக்க தனது கருத்துக்களை முன்வைத்துள்ளதாகவும் அதற்கு பதில் அளிக்க இலங்கை தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.