பக்கங்கள்

பக்கங்கள்

29 ஜன., 2013


காவிரியில் தண்ணீர் திறந்து விட உத்தரவிட முடியாது: சுப்ரீம் கோர்ட்
காவிரியில் தண்ணீர் திறந்து விட, கர்நாடகாவுக்கு உத்தரவிட முடியாது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்து விட்டது.

கருகும் சம்பா பயிரைக் காப்பாற்ற 12 டி.எம்.சி., நீரை காவிரியில் திறந்து விட உத்தரவிடக்கோரி, தமிழகத்தின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் 
செய்யப்பட்டது. 

இவ்வழக்கு 28.01.2013 திங்கள்கிழமை விசாரணைக்கு வந்த போது, கர்நாடகா சார்பில் கடந்த 20 ஆண்டுகளில் பயன்படுத்தப்பட்ட நீரின் அளவு குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிடப்பட்டது. 
இதையடுத்து இன்று (29.01.2013) கர்நாடகா அந்த அறிக்கையை தாக்கல் செய்தது. இதையடுத்து பேசிய நீதிபதிகள், காவிரியில் தமிழகம் கோரியபடி 12 டி.எம்.சி., தண்ணீரை திறந்து விட உத்தரவிட முடியாது என தெரிவித்து விட்டனர். மேலும் நீரைப் பெற காவிரி நதிநீர் ஆணையத்திடம் முறையிடும்படி கூறி, வழக்கு விசாரணையை வரும் 4 ம்தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.